UPDATED : செப் 10, 2024 04:48 PM
ADDED : செப் 06, 2024 02:43 AM

வாசகர்களின் பேரன்புடனும், ஆதரவுடனும் இன்று 73வது பிறந்த நாளை கொண்டாடுகிறது தினமலர். இந்த வெற்றிப்பயணத்திற்கு காரணமான வாசகர்களை நன்றியோடு தினமலர் நினைத்து பார்க்கும் அதேவேளையில், தங்கள் மனங்கவர்ந்த தினமலர் நாளிதழ் பற்றி மனம் திறந்து வாழ்த்துகளை தெரிவிக்கிறார்கள் நீண்டகால ராமநாதபுரம் மாவட்ட வாசகர்கள்...
எனக்கு பெருமை
எஸ்.சீனிவாசன், தினமலர் ஏஜன்ட், மண்டபம்: 1984 முதல் தற்போது வரை 40 ஆண்டுகள் மண்டபம் பகுதியில் தினமலர் நாளிதழ் ஏஜன்டாக உள்ளேன். உள்ளூர் மக்களின்
பிரச்னைகள், அதிகாரிகளின் தவறுகளை சுட்டிக்காட்டுவதுடன் பிரச்னைக்கு தீர்வு காணும் வரை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு செய்தியை கொண்டு செல்லும் ஒரே நாளிதழ் தினமலர் தான். இன்று வரை ஏரியா பிரச்னைகளுக்கு செவி கொடுத்து மக்களிடம் பேசப்படும் நாளிதழாக தினமலர் உள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக மண்டபம் தெருக்களில் சைக்கிளில் வீடுகள், கடைகளுக்கு சென்று விநியோகித்து வருவதை இந்த நன்னாளில் பெருமையாக கருதுகிறேன்.
நேர்மை தவறாத போர் வீரன்
பி.உதயகுமார், ஓய்வு தேசிய நல்லாசிரியர், திருவாடானை: நான் 40 ஆண்டு கால தினமலர் வாசகர். அரசியல், இனம், மதம் கடந்து தினமலர் நாளிதழ் மக்கள் சேவையாற்றுகிறது.
தினமலர் பட்டம் இதழ் கல்வி சேவைக்கான மகுடம். கிராமப்புற மக்களின் குறைகளை சுட்டிக்காட்டி தட்டிக்கேட்பதில் நேர்மை தவறாத போர்வீரன். ஏழை உழவனுக்கு உற்ற நண்பன். மலரும் மணமும் போல மக்களையும் தினமலர் நாளிதழையும் பிரிக்க முடியாது. தினமலர் துவங்கிய பயணம் இன்று வெளிவரும் நாளிதழ் பதிப்புகளில் மன்னாதி மன்னனாக திகழ்கிறது. மன்னர்கள் நகர்வலம் வந்து பிரச்னைக்கு தீர்வு கண்டதை இன்று தினமலர் நாளிதழ் செய்து வெற்றி காண்கிறது.
சமூக மாற்றத்திற்கான போராளி
என்.ஜெயகாந்தன், ஓய்வு நல்லாசிரியர், ராமேஸ்வரம்: 1977ல் எம்.ஜி.ஆர்., முதல்வரான காலம் முதல் தற்போது வரை நான் தினமலர் வாசகராக உள்ளேன். ஆன்மிகம், அறிவியல், அரசியல் செய்தியை தினமலர் நாளிதழில் படித்து தெரிந்து கொண்டேன். தினமலர் நாளிதழ் முக்கிய செய்திகளை வகுப்பறையில் மாணவர்களிடம் பலமுறை பகிர்ந்துள்ளேன். மாணவர்கள் உள்ளிட்ட பலதரப்பு மக்களிடம் வாசிக்கும் பழக்கத்தை கொடுத்தது தினமலர் தான். சமூக மாற்றத்திற்கான போராளி தினமலர் நாளிதழ் மட்டுமே என்று என்னால் உறுதியாக கூற முடியும்.
மாணவர்கள் விரும்பும் நாளிதழ்
ஏ.ஜாஸ்மின், கல்லுாரி மாணவி,கீழக்கரை: பள்ளி, கல்லுாரி மாணவர்கள் விரும்பி படிக்கும் நாளிதழ் தினமலர். மேற்கொண்டு என்ன படிக்கலாம் என்பதற்கு வழிகாட்டும் ஆசான். என்னை பெரிதும் கவர்ந்த சிறுவர் மலர் இணைப்பை சிறுவயதில் இருந்தே படித்து வருகிறேன். பள்ளி, கல்லுாரி படிப்பை தாண்டி பொதுநலச் செய்திகள், அறிவு சார்ந்த
விஷயங்களை வாரி வழங்குகிறது. வாசகர்களின் நலனை கருத்தில் கொண்டு உண்மை, நேர்மையின் உரைகல்லாக திகழ்கிறது.
![]() |
உள்ளூர் - உலக செய்திகள்
எஸ்.பாக்கியலட்சுமி, வழக்கறிஞர், திருவாடானை: முதலில் தினமலர் வாசகர் என்பதில் பெருமை கொள்கிறேன். உள்ளூர் முதல் உலகம் வரை அனைத்து செய்திகளையும் ஒன்றுவிடாமல் வாசகர்கள் பார்வைக்கு தருவது தினமலர். நீதிமன்ற செய்திகளை உடனுக்குடன் வெளியிடுவதால், வெளிநாடுகள் மற்றும் அனைத்து மாநிலங்களில் நடைபெறும் செய்திகளை தெரிந்து கொள்ள முடிகிறது. குக்கிராமங்களுக்கும் நிருபர்கள் சென்று வெளியில் தெரியாத பிரச்னைகளை கண்டறிந்து வெளியிட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதால் ஏதாவது ஒரு ஊரில் தீர்க்க முடியாத பிரச்னை என்றால் தினமலர் நிருபருக்கு போனை போடு என கிராம மக்கள் பேசுவர்.
அனைத்து மத செய்திகளுக்கும் முன்னுரிமைகே.பரக்கத் அலி, ஆர்.எஸ்.மங்கலம்: மாணவர்களை ஊக்கப்படுத்தும் நாளிதழ். பள்ளி, கல்லுாரி விழாக்கள் மட்டுமின்றி மாணவர்களின் தனித்திறன் குறித்தும் செய்தி வெளியிட்டு ஊக்கப்படுத்தி சாதனை புரிய வைக்கும் நாளிதழ். ரம்ஜான், கிறிஸ்துமஸ் உட்பட அனைத்து மத பண்டிகைகள், மத விழாக்கள் செய்திகளையும், ஆன்மிக கட்டுரைகள் வெளியிடுவது இதன் சிறப்பு. எங்கள் பகுதியில் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தியது. மக்கள் பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் துணிவுடன் செய்தி வெளியிடுவது பாராட்டத்தக்கது.
அரசின் தவறை சுட்டிக்காட்ட தயங்காது
கே. முத்துப்பாண்டியன், ஓய்வு போலீஸ் டி.எஸ்.பி., ஆப்பனுார்:முப்பது ஆண்டு கால தினமலர் வாசகர். எனது தந்தை ஆப்பனுாரில் கடை வைத்திருந்தார். அப்போது இருந்தே தினமலர் நாளிதழ் படிக்கும் பழக்கம் உண்டு. கடந்த ஆண்டு ஓய்வு பெற்றேன். ஆளுங்கட்சி யாராக இருந்தாலும் குறைகளை சுட்டிக் காட்டுவதில் மற்ற நாளிதழைக் காட்டிலும் உரத்துடன் உண்மையை உரக்கச் சொல்லும் நாளிதழ் தினமலர். டீ கடை பெஞ்ச், டவுட் தனபால் உள்ளிட்ட பகுதிகள் என்னை மிகவும் கவர்ந்த பகுதிகள். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளின் தவறுகளை சுட்டிக்காட்ட தயங்காத நாளிதழ். கனவு இல்லம், உபயோகமான தகவலை வாரிக் கொடுக்கிறது. மக்களின் மனதை தெளிவுப்படுத்துகிறது.
செய்திகளை முந்தி தருகிறது
பி.கே.குபேந்திரன், தொழில் முனைவோர், பரமக்குடி: அரசியலில் உண்மை செய்திகளை வெளியிடும் நாளிதழ் தினமலர். பள்ளி கல்லுாரி மாணவர்கள் பயனடையும் வகையில் கல்வி, பொது அறிவு பெட்டகமாக விளங்குகிறது. அந்தந்த ஊர்களில் நடக்கும் நிகழ்ச்சிகள், குறைகளை சுட்டிக் காட்டுவதிலும் முன்னணியில் உள்ளது. மக்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் போட்டிகள் நடத்துவதுடன், விளையாட்டு செய்திகளை அதிகம் வெளியிடுகிறது. செய்திகளை முந்தி தருவதில் தினமலர் முதன்மை இடத்தில் உள்ளது.
ஈடு இணையற்ற ஆன்மிக மலர்
வி.சிந்து, குடும்பத்தலைவி, கீழக்கரை: வாசகர்களின் கருத்துக்களை, எண்ண ஓட்டங்களை தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது. பெண்கள் முன்னேற்றத்திற்கான செய்திகளை
பகிர்வதில் தனிச் சிறப்பு வாய்ந்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் தினமலர் படிப்பேன். எளிமையான ஆன்மிக மலர், வாரமலர் இதழ் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆடி, நவராத்திரி உள்ளிட்ட விசேஷ தினங்களில் அம்மன் படங்கள் மற்றும்
ஆன்மிக செய்திகளை தினமலர் மட்டுமே வெளியிடுகிறது.
மாணவருக்கு வழிகாட்டும் நாளிதழ்
எம்.பெரியசாமி, கல்லுாரி முதல்வர், ராமநாதபுரம்: தினமலர் நாளிதழ் கல்விச்சேவை பாராட்டுக்குரியது. தினமலர் நாளிதழுடன் இணைந்து வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தியதை மறக்க முடியாது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக தினமலர் நாளிதழில் விளம்பரம் வெளியிடுகிறோம். நல்ல வரவேற்பு உள்ளது.
மக்கள் பிரச்னை, அரசியல் அனைத்தையும் வெளியிடுகின்றனர்.
மக்கள் ஆரோக்கியத்தில் அக்கறை
ஏ.அருள்மலர், நர்சிங் கல்லுாரி முதல்வர், ராமநாதபுரம்: தினமலர் நாளிதழில் தினமும் சிறிய கட்டத்திற்குள் மக்களின் ஆரோக்கியம் சார்ந்த பாக்ஸ் செய்திகள் இடம் பெறுகிறது. 'துாங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு அலைபேசியை தவிர்க்கவும். கார் ஓட்டும் போது சீட் பெல்ட் அணிய வேண்டும்,' என பயனுள்ள தகவல்கள் வருகிறது. நோய்களை தடுக்க சிறப்பு கட்டுரை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவது பாராட்டுக்குரியது.
உண்மையை சொல்லும் நாளிதழ்
கே.பழனியாண்டி, ஓய்வு துணை கலெக்டர், ராமநாதபுரம்: தினமலர் நாளிதழ் தினமும் படிக்கிறேன். ஏரியா பிரச்னைகளை வெளியிட்டனர். உடனடியாக ரோடு அமைத்து தந்தனர். சண்டே ஸ்பெஷலில் நான் தயாரித்த கலைநயமிக்க சிற்பங்களை
வெளியிட்டு பெருமைப்படுத்தினர். ஆன்மிக மலர், சிறுவர் மலர், வாரமலர் ஆகிய புத்தங்களில் நிறைய தகவல்கள் வருகின்றன.
அரசு ஊழியர் குரலாக தினமலர்
ஆர்.விஜயகுமார், சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர், ராமநாதபுரம்: போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், வருவாய், ஊரக வளர்ச்சித்துறை என அனைத்து அரசு ஊழியர்களின் கோரிக்கைகள், போராட்டங்களை தொடர்ந்து தினமலர் நாளிதழ் வெளியிட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறது. கோயில் விழா, உள்ளூர் செய்திகள் நிறைய வெளியிடுகிறது.
அறிவு வளர்க்கும் நாளிதழ்
ஜீ.சாந்தினி, கல்வியாளர், ராமநாதபுரம்: தினமலர் நாளிதழில் வெளிவரும் செய்திகள் படிப்பதற்கு எளிமையாக, தெளிவாக உள்ளன. முக்கியமாக கல்வி மலர், திங்கள் அன்று பட்டம் என மாணவர்களின் கல்விக்கும் பயன்படும் நிறைய பொது அறிவு தகவல்கள் வெளி வருகிறது. இவற்றை குறிப்பெடுத்து மேடையில் பேசும் போது பயன்படுத்துவேன்.
குறைகளை சுட்டிக்காட்டும்
டி.சந்திரமோகன், டாக்டர், பரமக்குடி: தினமலர் நாளிதழை பொறுத்தவரையில் யார் ஆளும் கட்சி என்றாலும் தைரியமாக குறைகளை சுட்டிக்காட்டும் ஒரே நாளிதழாக உள்ளது.
அறிவியல், கல்வி, அரசியல், ஆன்மிகம், தொழில்நுட்பம், ஜோதிடம், சினிமா, விளையாட்டு, சிறுவர் கதைகள் என அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான நாளிதழ்.
சமூக அக்கறை கொண்ட நாளிதழ்
ஏ.சார்லஸ், தொழிலதிபர், பரமக்குடி: நவீன கணினி காலத்திலும் தினந்தோறும் எழுந்தவுடன் விரும்பி படிக்கும் நாளிதழ் தினமலர் தான். அலைபேசி உள்ளிட்ட எந்த தளத்தில் செய்திகள் வெளியீடு செய்தாலும் தினமலர் படித்த பிறகே தான் அன்றைய நாள் ஆரம்பமாகும். சமுதாயத்தில் குறைகளை சுட்டிக்காட்டும் சமுதாய அக்கறை கொண்ட ஒரே நாளிதழ். இதனை செய்தால் மக்களுக்கு நல்லது என்ற கருத்தை அரசுக்கு தெரிவிக்கிறது.
வர்த்தகர்களுக்கு உதவுகிறது
ஆர்.மூவேந்திரன், வர்த்தகர், முதுகுளத்துார்: சமூக அக்கறையுடன் நாட்டில் நடக்கும் தவறுகளையும் நிர்வாக பிரச்னைகளையும்
அரசுக்கும் அதிகாரிகளுக்கும் சுட்டிக்காட்டி தீர்வு கண்டு வருகிறது. வணிகர்களுக்கு தேவையான ஏராளமான செய்திகள் வெளியிட்டு உதவுகிறது. தினமலர் உண்மையின் உரைகல்
என்பதில் மாற்று கருத்து இல்லை. முதல்வர் மாவட்டத்திற்கு வரும் போது முதல்வர் கவன கட்டுரை வெளியிட்டு மாவட்டத்தின் அனைத்து பிரச்னைகளையும் எழுதுகிறது.
பட்டம் இதழுக்கு வரவேற்பு
எம்.மந்திரிகுமார், கட்டட பொறியாளர், முதுகுளத்துார்: வாஸ்து, நல்ல நேரம் குறித்து மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தகவல்கள் தினமலர் நாளிதழில் கிடைக்கிறது. முதுகுளத்துாரில் சுற்றுச்சாலை, போக்குவரத்து நெரிசல் குறித்து பலமுறை செய்தி வெளியிட்டதால் தற்போது சுற்றுச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தினமலர் ராசி பலன், சிறுவர் மலர், ஆன்மிக மலர், பட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.
காலையில் படிப்பேன்
என்.ஜே.போஸ், விசைப்படகு மீனவ சங்கத் தலைவர், ராமேஸ்வரம்: அரசியல்வாதிகள், அதிகாரிகளின் தவறுகளை துணிவுடன் நேர்மையாக வெளியிடும் ஒரே நாளிதழ் தினமலர் தான் என்பது தமிழக மக்களிடம் ஆழமாகப் பதிந்துள்ளது. மீனவர் பிரச்னைகளை முழுமையாக வெளியிட்டு மீனவர் நலனில் அக்கறை கொண்ட நாளிதழ் தினமலர். காலையில் தினமலர் நாளிதழை படிக்காமல் வெளியில் செல்வது இல்லை.
செய்தி வந்தாலே தீர்வு கிடைக்கிறது
கே.மதிவாணன், சமூக ஆர்வலர்,ஆர்.எஸ்.மங்கலம்: சமூக சிந்தனை வாதிகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் நாளிதழ் தினமலர். அன்றாடம் மக்கள் பிரச்னைகளை எழுதுவதோடு அதற்கான தீர்வுகளையும் காட்டுவது இதன் சிறப்பு. தினமலர் நாளிதழில் செய்தி வந்தாலே அதிகாரிகள் மூலம் தீர்வும் கிடைத்து விடுகிறது. கல்வி, சமூக விழிப்புணர்வு
உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் வாசகர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் நாளிதழாக தினமலர் விளங்குகிறது.