sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

744 ஆதி திராவிடர் பள்ளிகளுக்கு ரூ.66 லட்சம் செலவில் குடிநீர் தூய்மைப்படுத்தும் கருவிகள் வழங்கப்படுகி

/

744 ஆதி திராவிடர் பள்ளிகளுக்கு ரூ.66 லட்சம் செலவில் குடிநீர் தூய்மைப்படுத்தும் கருவிகள் வழங்கப்படுகி

744 ஆதி திராவிடர் பள்ளிகளுக்கு ரூ.66 லட்சம் செலவில் குடிநீர் தூய்மைப்படுத்தும் கருவிகள் வழங்கப்படுகி

744 ஆதி திராவிடர் பள்ளிகளுக்கு ரூ.66 லட்சம் செலவில் குடிநீர் தூய்மைப்படுத்தும் கருவிகள் வழங்கப்படுகி


ADDED : செப் 06, 2011 11:13 PM

Google News

ADDED : செப் 06, 2011 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''744 ஆதி திராவிடர் நலப் பள்ளிகளுக்கு, குடிநீர் தூய்மைப்படுத்தும் கருவிகள், 66 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கப்படும்'' என, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்தார்.



சட்டசபையில், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:



* தமிழகத்தில், 1,294 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் உள்ளன.

இவை, மாணவ, மாணவியருக்குப் போதுமானதாக இல்லை. எனவே, தேவைப்படும் இடங்களில், 25 புதிய விடுதிகள் துவங்கப்படும்.



* பிளஸ் 2 வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில், ஒவ்வொரு மாவட்டத்திலும், முதலாவது இடம் பெறும் ஆதி திராவிடர், பழங்குடியினர், கிறிஸ்துவ ஆதி திராவிட மாணவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையான 3,000 என்பது, 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். பத்தாம் வகுப்பு தேர்வில், முதல் மூன்று இடங்கள் பெறும் ஆதி திராவிட மாணவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையான 1000, 500, 300 ரூபாய், 2,000, 1,000, 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.



* உயர் கல்வி சிறப்பு உதவித் தொகை திட்டத்தின் கீழ், விடுதிகளில் தங்கி இளங்கலை பட்டப் படிப்பு, தொழிற்பயிற்சி பயிலும் மாணவ, மாணவியருக்கு 7,500 ரூபாயாகவும், முதுகலை மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு 8,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம், 26,148 பேர் பயனடைவர்.



* விடுதிகளில் தங்கிப் பயிலத் தகுதி வாய்ந்த ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதி திராவிடர் மாணவ, மாணவியர் அதிக அளவில் விண்ணப்பித்துள்ளனர். விடுதிகளில் மாணவ, மாணவிகளுக்கு கூடுதலாக, 1,500 இருக்கைகள் ஏற்படுத்தப்படும்.



* கடந்த ஆண்டுகளில், நிதி குறைவாக ஒதுக்கப்பட்டதால், கட்டப்படாமல் நிலுவையில் உள்ள பழங்குடியினருக்கான 1,095 வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதைப் போல, வீடு ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் அனுமதித்து, தேவையான கூடுதல் தொகை வழங்கி, கட்டி முடிக்கப்படும்.



* ஆதி திராவிட மக்கள் அதிகமாக வாழும் குடியிருப்புகளில், 10 சமுதாயக் கூடங்கள் ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். 744 ஆதி திராவிடர் நலப் பள்ளிகளுக்கு, குடிநீர் தூய்மைப்படுத்தும் கருவிகள், 66 லட்சத்து 96 ஆயிரம் செலவில் வழங்கப்படும்.



* நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் ஆய்வு மையத்தில், 49 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் செலவில், கட்டட பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.



* பழங்குடியின மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகளுக்கு, 74 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் படுக்கைகள் வழங்கப்படும். இவ்வாறு, அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்தார்.








      Dinamalar
      Follow us