ADDED : அக் 30, 2025 11:11 PM
சென்னை:குற்றத்தடுப்பு நடவடிக்கையாக, 2.89 லட்சம் பழைய குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கண்காணித்ததில், அவர்களில், 7,807 பேர் திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் மீண்டும் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
மாநிலம் முழுதும் குற்ற வழக்குகளில் கைதாகி, சிறை சென்று ஜாமினில் வெளியே வந்த, பழைய குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகின்றனர்.
அவர்கள் குறித்த விபரங்கள், 'சிசிடிஎன்ஸ்' எனும் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், குற்றத் தடுப்பு நடவடிக்கையாக, பழைய குற்றவாளிகளின் நடவடிக்கைகள் குறித்து, காவல் நிலைய போலீசாரும், ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர் .
அந்த வகையில், இந்த ஆண்டில் பழைய குற்றவாளிகள், 2.89 லட்சம் பேர் நடவடிக்கைகளை கண்காணித்ததில், 7,807  பேர் திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் மீண்டும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தொடர் விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

