ADDED : ஆக 30, 2011 06:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்:வீடுபுகுந்துரூ.8லட்சம்மதிப்பிலான நகைகள் கொள்ளை.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர்-பூச்சிபாளையம் பைபாஸில் மரக்கடை நடத்தி வருபவர் லோகேஷ் மற்றும் சினேகப்பிரியா. இவரது வீடு குப்பச்சிபாளையத்தில் உள்ளது. இன்று காலை மரக்கடைக்கு சென்றுவிட்டு மாலை 5 மணிக்கு வீடு திரும்பிய லோகேஷ் வீட்டை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். வீட்டிலிருந்த 10 பவுன் 10 கிலோ வெள்ளி ஆகியவை உள்ளிட்ட ரூ.8லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து தகவல் அறிந்த பரமத்தி வேலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

