சட்ட விரோத ஊடுருவல்; திருப்பூரில் வங்கதேசத்தினர் 8 பேர் கைது
சட்ட விரோத ஊடுருவல்; திருப்பூரில் வங்கதேசத்தினர் 8 பேர் கைது
ADDED : ஜன 04, 2025 01:07 PM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தொழில் நகரமான திருப்பூரில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள பனியன் உற்பத்தி ஆலைகளில் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களில் வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்களும் உள்ளனர்.
போலியான ஆதார் அட்டை மூலம் வீடு எடுத்து வசிப்பதாகவும், சில காலம் கழித்து இங்கேயே நிரந்தரமாக தங்கி விடுவதாகவும் புகார்கள் உள்ளன.
தொடர் புகார்களை அடுத்து, திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி, சட்ட விரோதமாக தங்கி உள்ளவர்களை போலீசார் கண்டறிந்து கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஊத்துக்குளி, பல்லடம், மங்கலம் ஆகிய பகுதிகளில், அறிமுகம் இல்லாதவர் தங்கியிருக்கும் இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த அலோம் சேக், 40, அமினூர் 20, சோகைல், 25, கைரூல் 25, ரோஷன்35, வாஹித், 40, ஹிருதய், 22 மற்றும் கொக்கூன், 22 ஆகிய எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.