தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சென்னை திரும்புவோருக்கு 8,200 பஸ்கள்

சென்னை திரும்புவோருக்கு 8,200 பஸ்கள்

சென்னை திரும்புவோருக்கு 8,200 பஸ்கள்


ADDED : ஜன 18, 2025 04:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2025 04:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: பொங்கல் பண்டிகை முடித்து, சென்னை திரும்புவோருக்காக, இன்றும், நாளையும் 8,200 சிறப்பு பஸ்கள் இயக்க, அரசு போக்குவரத்துக் கழகங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. பொங்கல் பண்டிகை கொண்டாட, சென்னையில் இருந்து, அரசு பஸ்களில் 8.73 லட்சம் பேர் வெளியூர் சென்றனர்.

இவர்கள் விடுமுறை முடிந்து, இன்றும், நாளையும் சென்னை திரும்ப உள்ளனர். அவர்கள் வசதிக்காக, பல்வேறு ஊர்களில் இருந்து, சென்னைக்கு இன்று 3,600, நாளை 4,600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

அதேபோல், சென்னை தவிர்த்து முக்கிய நகரங்களில் இருந்து, மற்ற ஊர்களுக்கு, இன்று 1,200; நாளை 3,400 பஸ்கள் இயக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us