ADDED : ஜூன் 23, 2025 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி: தென்காசி, கடையம் அருகே உள்ள கட்டளையூர் மாடசாமி, 77; மகன்கள் அழகு ராஜன், 43, கண்ணன், 38. இவர்கள், நேற்று முன்தினம் பாவூர்சத்திரத்தில் பிரபல பிரியாணி கடையில் பிரியாணி ஆர்டர் செய்து வீட்டில் சாப்பிட்டனர்.
சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக கடையம் தனியார் மருத்துவமனையில் மாடசாமி, அழகு ராஜன், கண்ணன், அவர்களின் குழந்தைகள், உட்பட 9 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

