ADDED : டிச 17, 2024 01:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே கம்பளி கிராமத்தில் திடீர் மழையால் நீரில் மூழ்கி பலியான 90 ஆடுகள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டன.
தென்காசி மாவட்டம் ஆயக்குடி அருகே கம்பளி கிராமத்தில் கிருஷ்ணசாமி தோட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த மாரியப்பன், குத்தாலராமன் மற்றும் சாம்பவர்வடகரை பகுதியை சேர்ந்த இருவருடைய ஆடுகள் என மொத்தமாக 100க்கும் மேற்பட்ட ஆடுகள் கிடை அமர்த்தி வளர்க்கப்பட்டு வந்தன.
பெய்த கனமழையின் காரணமாக தோட்டத்திற்குள் வெள்ள நீர் புகுந்தது. தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வந்த 90க்கும் மேற்பட்ட ஆடுகள் வெள்ளத்தில் மூழ்கி பலியாகின. ஆய்க்குடி பேரூராட்சி ஊழியர்கள் அங்கு உயிரிழந்து கிடந்த ஆடுகளின் உடல்களை மீட்டு கால்நடை மருத்துவர்கள் மூலம் உடற்கூறாய்வு பரிசோதனை செய்யப்பட்டது. 90 ஆடுகள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டன.

