'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் 9.38 லட்சம் பேர் பயன்
'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் 9.38 லட்சம் பேர் பயன்
ADDED : நவ 23, 2025 01:40 AM
சென்னை: தமிழகத்தில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாம்களில், 9.38 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாம் நடந்து வருகிறது.
வாரந்தோறும் சனிக் கிழமை, காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடக்கும் முகாமில், பொது மருத்துவம், நரம்பியல், தோல், காது, மூக்கு, தொண்டை, மகப்பேறு, இயன்முறை, பல் மருத்துவம் உள்ளிட்ட பல்துறை சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்யப்படுகிறது.
முதல்வர் காப்பீட்டு திட்டப் பதிவு, மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்குதல் போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன. தொடர்ந்து, 16வது வாரமாக நடந்த முகாம்களில், நேற்று, 56,139 பேர் பயனடைந்துள்ளனர்.
இதுவரை, 9.38 லட்சம் பேர் பயனடைந்து இருப்பதாக, மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்து உள்ளது.

