தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 7 நாட்களில் 949 ரவுடிகள் கைது

 7 நாட்களில் 949 ரவுடிகள் கைது

 7 நாட்களில் 949 ரவுடிகள் கைது


ADDED : ஜூலை 09, 2026 12:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 12:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சட்டம் ஒழுங்கு பராம ரிப்பு, குற்றத்தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகம் முழுதும், இம்மாதம் 1ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை, ரவுடிகளை தேடும் பணியில், போலீசார் ஈடுபட்டனர்.

அப்போது, ரவுடிகள், குற்றத்தில் ஈடுபட முயன்ற வர்கள், குற்ற வழக்குகளில் கைதாகி, ஜாமினில் வந்தவர்கள் என, 24,025 பேரை பிடித்து விசாரித்தனர்.

அதன் தொடர்ச்சியாக, பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட, 949 ரவுடி களை கைது செய்தனர்.

குற்ற வழக்குகளில் கைதாகி, ஜாமினில் வெளி வந்த பின், நீதிமன்றத்தில் ஆஜராகாததால், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட, 2,385 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நடவடிக்கையை தொடர வேண்டும் என, டி..ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டு உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us