நிலக்கல், சபரிமலை பாதைகளில் 9500 எல்.இ.டி.விளக்குகள் அமைப்பு
நிலக்கல், சபரிமலை பாதைகளில் 9500 எல்.இ.டி.விளக்குகள் அமைப்பு
ADDED : டிச 13, 2025 01:29 AM
சபரிமலை: சபரிமலை பாதைகளில் பக்தர்களுக்கு வெளிச்சம் தருவதற்கு கேரள மின்வாரியம் 9 ஆயிரத்து 500 எல். இ. டி. மின் விளக்குகளை அமைத் துள்ளது.
பெரியாறு வனவிலங்கு சரணாலய காட்டுப்பகுதியில் அமைந்துள்ள சபரிமலைக்கு, நடப்பு மண்டல சீசனில் திரளான பக்தர்கள் தினமும் வந்து கொண்டிருக்கின்றனர்.
எந்த சீசனிலும் இல்லாத அளவு எல்லா நாட்களிலும் பக்தர்களின் நீண்ட வரிசை காணப்படுகிறது.
இவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அரசு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அவ்வகையில் கேரள மின் வாரியம் பக்தர்கள் வரும் பாதைகளில் வெளிச்சம் ஏற்படுத்துவதற்கு போதுமான வசதிகளை செய்துள்ளது.
பம்பை முதல் சன்னிதானம் வரை உள்ள பாதைகளிலும், சன்னிதான சுற்றுப்புறங்களிலும் 4500 எல்.இ.டி. மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
நிலக்கல் பார்க்கிங் கிரவுண்டில் 5 ஆயிரம் எல் இ.டி. விளக்குகள் நிறுவப்பட்டுள்ளது.
புதிதாக ஏதாவது பகுதியில் மின்விளக்கு தேவைப்பட்டால் அப்பகுதியிலும் அமைப்பதற்கு மின்வாரியம் தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்காக ஒரு துணை பொறியாளர் தலைமையில் 25 ஊழியர்கள் தினமும் பணியாற்றுகின் றனர்.
10 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாளர்கள் வருகின்றனர். தினமும் எல்லா மின் பாதைகளிலும் பாதுகாப்பு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
பத்தனம்திட்டா மண்டல துணை முதன்மை பொறியாளர், நிர்வாகப் பொறியாளர் ஆகியோர் மேற்பார்வையில்அதிகாரி களும் ஊழியர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மின்தடை ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதற்கான மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

