ADDED : டிச 16, 2025 05:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: நாடு முழுதும், 99.20 சதவீத ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு உள்ளதாக, ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளதாவது: கடந்த 2019 முதல் 2025 நவம்பர் வரை, 33,000 கி.மீ., துார ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு உள்ளன. அதன்படி, நாட்டின் ஒட்டுமொத்த ரயில் பாதைகளில் தற்போது, 99.20 சதவீதம் மின்மயமாக்கல் பணிகள் முடிந்துள்ளன. எஞ்சியுள்ள பணிகளையும் விரைந்து முடிக்க, அனைத்து ரயில் மண்டலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இது மட்டுமின்றி, ரயில் நிலைய மேற்கூரைகளில், 'சோலார்' மின் உற்பத்தி சாதனங்கள் அமைப்பது, ரயில்வேக்கு சொந்தமான பகுதிகளில் காற்றாலைகள் நிறுவுவது உள்ளிட்ட பணிகளும் நடந்து வருகின்றன. தெற்கு ரயில்வேயில் மின்மயமாக்கும் பணிகள், 97.33 சதவீதம் முடிந்துள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

