ADDED : ஆக 06, 2024 05:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: வரும் 9 ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் தோல்விக்கு பிறகு மாவட்ட வாரியாக இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தி உள்ளார். அதில் தோல்விக்கான காரணங்கள் ஆராயப்பட்டதோடு, சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் பணிகளை துவக்கும்படி அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், வரும் 9 ம் தேதி காலை 9: 30 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இ.பி.எஸ்., தலைமையில் நடைபெற உள்ளது.