வெளியேறியது முஸ்லிம் லீக்; 60 ஆண்டு கால திமுக கூட்டணிக்கு 'டாட்டா'
வெளியேறியது முஸ்லிம் லீக்; 60 ஆண்டு கால திமுக கூட்டணிக்கு 'டாட்டா'
UPDATED : ஜூன் 20, 2026 01:53 PM
ADDED : ஜூன் 20, 2026 01:08 PM

நமது நிருபர்
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த முஸ்லிம் லீக், 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு பிறகு தொங்கு சட்டசபை அமைந்த நிலையில், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிப்பதாக அந்த கட்சி அறிவித்தது. அந்த கட்சி சார்பில் அமைச்சரவையில் ஷாஜஹான் இடம் பெற்றுள்ளார்.
தங்கள் கூட்டணியில் வெற்றி பெற்று விட்டு, தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிப்பது, அமைச்சரவையில் இடம் பெறுவது தொடர்பாக, திமுகவுக்கும், முஸ்லிம் லீக் தலைவர்களுக்கும் சமூக வலைதளங்களில் மோதல்கள் நடந்தன. இரு தரப்பினரும் உக்கிரமாக மோதிக்கொண்டனர்.
இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்து முறைப்படி விலகுவதாக முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது. சென்னையில் கட்சி தலைவர் காதர் மொய்தீன் தலைமையில் நடந்த மாநிலக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் லீக், திமுக கூட்டணியில் 60 ஆண்டுக்கும் மேலாக இடம் பெற்றிருந்தது. இப்போது தான் முதல் முறையாக கூட்டணியில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
