ADDED : டிச 09, 2024 04:38 AM

கடந்த ஒரு வாரத்தில், 40 தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை கைது செய்துள்ளது. இதை கண்டித்து, ராமேஸ்வரத்தில் மீனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். அதன்பிறகும், சிங்கள கடற்படை மீனவர்களை கைது செய்திருக்கிறது என்றால், அது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். இந்த ஆண்டு மட்டும், 569 தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் 73 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை திருப்பி வழங்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற, இலங்கை அரசு மறுத்து வருகிறது.
சிறையில் வாடும் அனைத்து மீனவர்களையும், உடனே மீட்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கும் மேலாக, மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, மத்திய, மாநில அரசுகள், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
- அன்புமணி, பா.ம.க., தலைவர்