தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மூடிய அறையில் விசாரணை

மூடிய அறையில் விசாரணை

மூடிய அறையில் விசாரணை


UPDATED : நவ 28, 2026 12:00 AM

ADDED : நவ 27, 2026 11:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 12:00 AM ADDED : நவ 27, 2026 11:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., செய்திக்கு பாக்ஸ்

பெண் அதிகாரிக்கு த.வெ.க., – எம்.எல்.ஏ., ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய, டி.ஜி.பி., மற்றும் மாவட்ட எஸ்.பி.,க்கு உத்தரவிடக்கோரி, சென்னையை சேர்ந்த அ.தி.மு.க., பெண் வழக்கறிஞர் ஆர்.திரிசூலி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சமூக வலைதளங்களில் உள்ள பதிவுகளை நீக்க வேண்டும் என்றும், வழக்கு தொடர்பான செய்திகளை வெளியிட, பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு தடை விதித்தும் உத்தரவிட்டது.

இந்த வழக்கு, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மூடிய அறையில், வழக்கு விசாரணையை நடத்தும்படி, பாதிக்கப்பட்டவர் தரப்பில் கோரப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து, பிற்பகல் வழக்கு விசாரணையின் போது, நீதிமன்ற அறையில், இரு தரப்பு வழக்கறிஞர்கள் தவிர, பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட, வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.

நீதிமன்ற அறையை மூடுவதற்கு முன், நீதிபதி முன் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, ‘இந்த விவகாரம் தொடர்பாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, கவர்னர் அர்லேக்கர் மற்றும் டி.ஜி.பி.,யிடம் புகார் அளித்துள்ளார். விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி, தி.மு.க., முன்னாள் எம்.பி.,யும் வழக்கு தாக்கல் செய்துள்ளார்’ என்றார். அதைக்கேட்ட நீதிபதி லட்சுமி நாராயணன், ‘‘சி.பி.ஐ., விசாரணை கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களின் எண்ணிக்கையை பார்த்தால், சென்னையில், சி.பி.ஐ.,யின் கிளையை தான் தொடங்க வேண்டும். தமிழக காவல் துறையினரே திறமையாக செயல்படுகின்றனர்,’’ என்றார்.

இதையடுத்து, மூடிய அறையில் அரை மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடந்தது. பின், வழக்கு விசாரணை, டிச., 4ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us