UPDATED : ஜன 30, 2024 04:49 AM
ADDED : ஜன 30, 2024 04:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ஆவின் பால் பொருட்கள் விற்பனையை மாதம் 50 கோடி ரூபாயாகஉயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பால் பொருட்கள் விற்பனை வாயிலாக மாதந்தோறும் 35 முதல் 40 கோடி ரூபாய் வரை ஆவினுக்கு வருவாய் கிடைத்துவருகிறது.
பனிக் காலம் முடிந்து வெயில் தலைகாட்ட துவங்கியுள்ள நிலையில்தயிர், லஸ்ஸி, நறுமண பால், ஐஸ்கிரீம், குல்பி உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகரிக்கத்துவங்கியுள்ளது.
எனவே ஆவின் பால் பொருட்கள் உற்பத்தியை பெருக்கி பால் பொருட்களின் மாத விற்பனையை 50 கோடி ரூபாயாக அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.