அமைச்சர் தியாகராஜனின் தாத்தாவும், முன்னாள் அமைச்சருமான பி.டி.ராஜன் 50ம் ஆண்டு நினைவு ஆண்டையொட்டி, 'தமிழ்வேள் பி.டி.ராஜன் நினைவுகளில் 50' என்ற 'டிஜிட்டல்' சிறப்பு மலரை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், தியாகராஜன், சிறப்பு மலர் தொகுப்பாளர் சிவப்பிரகாசம் ஆகியோர் பங்கேற்றனர்.
கடந்த 2011 அக்., 11ல், 'www.tamildigitallibrary.in' என்ற தமிழ் மின் நுாலகம், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இதில், இலக்கியம், சமயம், வரலாறு, மருத்துவம், அறிவியல் உள்ளிட்ட பிரிவுகளில், லட்சத்திற்கும் மேற்பட்ட நுால்கள், பருவ வெளியீடுகள், 8 லட்சத்திற்கும் மேலான ஓலைச்சுவடி பக்கங்கள் பதிவேற்றப்பட்டன. இம்மின் நுாலகம் குறுகிய காலத்தில், 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

