நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர் மின் நிலையத்தில், கடந்த 19ம் தேதி மாலை, நிலக்கரி கட்டமைப்பு எதிர்பாராத விதமாக சரிந்து விழுந்தது. அந்த இடத்தில் பணி செய்து கொண்டிருந்த ஏழு ஒப்பந்தத் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். அவர்களில் இருவர் இறந்தனர்; ஐந்து பேர் காயமடைந்தனர்.
இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா, 10 லட்சம் ரூபாய், சிகிச்சை பெற்று வரும் ஐவருக்கு தலா, 2 லட்சம் ரூபாய், நிவாரண தொகையை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வழங்கினர்.

