நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகளை விற்கிறது. வரும், 15ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, மதுக்கடைகளுக்கு விடுமுறை. பொங்கல் தொடர் விடுமுறைக்கு, பலரும் சொந்த ஊர் செல்வர் என்பதால், மது விற்பனை அதிகம் இருக்கும்.
திருவள்ளுவர் தின விடுமுறை நாளில், முறைகேடான மது விற்பனையை தடுக்க, 'மதுக்கடைகளில் ஒரே நபருக்கு பெட்டி, பெட்டியாக மது வகைகளை விற்கக்கூடாது; அதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, டாஸ்மாக் நிறுவனம் ஊழியர்களை எச்சரித்துள்ளது.