தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சில வரிகள்: அக். 14

சில வரிகள்: அக். 14

சில வரிகள்: அக். 14


UPDATED : அக் 14, 2026 12:00 AM

ADDED : அக் 13, 2026 09:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 12:00 AM ADDED : அக் 13, 2026 09:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: செட்டியக்காபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரி மாணவர்கள் 14 பேர், நேற்று மாலை, தர்மராஜ், 29, என்பவர் ஓட்டி வந்த சரக்கு வாகனத்தில், ‘லிப்ட்’ கேட்டு ஏறி, தாமரைக்குளம் நோக்கி சென்றனர். அப்போது, வாகனம் கவிழ்ந்து, சிவகங்கையை சேர்ந்த சரண், 19, என்பவர், உயிரிழந்தார்.

சில வரிகள்

விருதுநகர்: கங்கர் செவல்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில், நேற்று மாலை, 5:00 மணிக்கு சரக்கு வாகனத்தில் வந்த அலுமினிய பவுடர் டின்களை, தொழிலாளர்கள் இறக்கி வைத்து கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில், சிவகாசியைச் சேர்ந்த புலித்துரை, 35, படுகாயமடைந்தார்.

சிலவரி

திருப்பத்துார்: பாலுாரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 25. இவர், சமூக வலைதளத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண்களின் போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டார். அப்பகுதி பெண்கள் புகாரில், ஆம்பூர் போலீசார், நேற்று கார்த்திகேயனை கைது செய்தனர்.

சில வரிகள்

திருச்சி: துறையூர் அருகே மேட்டுப்பாளையத்தில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கி கிளையின் ஏ.டி.எம்.,மில், நேற்று அதிகாலையில், மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு, தோல்வியில் முடிந்ததால் அங்கிருந்து தப்பினர். இதனால், ஏ.டி.எம்., இயந்திரத்தில் இருந்த, 19 லட்சம் ரூபாய் தப்பியது.

சில வரிகள்

சேலம்: புதுக்காலனியை சேர்ந்தவர் சுப்ரமணியன், 45. எம்.பில்., படித்த இவர், ஊனத்துாரில் உள்ள கோழிப்பண்ணைக்கு வேலைக்கு சென்றநிலையில், அப்பகுதியில் துாக்கிட்டு உயிரிழந்தார். சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது மனைவி ஜெயலட்சுமி, டி.எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தார்.

சிலவரி

கிருஷ்ணகிரி: கல்லுகான்கொட்டாயை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 46. மீன் வறுவல் கடை நடத்தினார். சமூக வலைதளம் மூலம் பழகிய நபர், பழைய, 5 ரூபாய்க்கு, 56,000 ரூபாய் கிடைப்பதாக கூறியதை நம்பி, 3.50 லட்சம் ரூபாயை இழந்தார். இந்த மன உளைச்சலில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us