நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவத் தேர்வு, டிச., 16 முதல் 23ம் தேதி வரை நடத்தப்பட்டு வருகிறது. 'பெஞ்சல்' புயல் காரணமாக கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மட்டும் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
தற்போது மூன்று மாவட்டங்களிலும், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு, ஜன., 2ம் தேதி முதல், 10ம் தேதி வரை நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.