கட்சியை நடத்தும் தலைவருக்கு உடல் முழுவதும் கண் இருக்கணும்; சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்
கட்சியை நடத்தும் தலைவருக்கு உடல் முழுவதும் கண் இருக்கணும்; சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்
ADDED : அக் 20, 2025 07:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலூர்: 'ஒரு கட்சியை நடத்துவது சாதாரண விஷயம் அல்ல. கட்சியை நடத்தும் தலைவருக்கு உடல் முழுவதும் கண் இருக்க வேண்டும்' என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
வேலூரில் நிருபர்களிடம் துரைமுருகன் கூறியதாவது: ஒரு கட்சியை நடத்த வேண்டும் என்பது சாதாரணமானது அல்ல. கட்சியை நடத்துகிற தலைவருக்கு, முகத்தில் இரண்டு கண் அல்ல. உடல் முழுவதும் கண்ணாக இருக்க வேண்டும். உடல் முழுவதும் சிந்திக்கும் திறன் இருக்க வேண்டும். காரணம் பல்வேறு குணங்களைக் கொண்ட, பல்வேறு விதமான மனிதர்களை அடங்கியது ஒரு கட்சி.
எல்லோரையும் ஒன்று சேர்த்து அதனை அழைத்து செல்லும் திறமை எந்த கட்சிக்கு இருக்கிறதோ அந்த கட்சி, வெற்றி பெறும். செழிப்பாக இருக்கும். அது இல்லை, என்றால் அந்த கட்சி கொஞ்ச நாளில் இல்லாமல் போய்விடும். இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.