உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 19, 2026 06:00 AM

அ நிறம் | அளவு
கர்நாடகாவில், அம்மாநில வனத்துறையால் தமிழர்கள் மூவர் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக, சம்பந்தப்பட்ட வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவர்களை 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும். இது குறித்து, கர்நாடக வனத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, கர்நாடக அரசு சார்பில், தலா 15 லட்சம் ரூபாய் நிவாரணம் தர வேண்டும்.
அரசு மருத்துவ கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தகுதி தேர்வு தேவை என்ற நோக்கில், காங்., ஆட்சியின்போது, 'நீட்' தேர்வு கொண்டு வரப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில், பட்டாசு தொழிலில் தவறு செய்தோரை தண்டிக்காமல், முறையாக இயங்கும் ஆலைகளில் ஆய்வு என்ற பெயரில் இடையூறு செய்யும் போக்கை அதிகாரிகள் மாற்றி கொள்ள வேண்டும்.
- மாணிக்கம் தாகூர் , தலைவர், தமிழக காங்கிரஸ்
