வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு; நவம்பர் 17ல் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு; நவம்பர் 17ல் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்
UPDATED : நவ 15, 2025 01:55 PM
ADDED : நவ 15, 2025 01:19 PM

சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது. நவம்பர் 17ம் தேதி 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, அக்., 16ல் துவங்கியது. ஓரிரு நாட்களில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால், தமிழகத்தில் பருவமழை தீவிரமாகும் என்று எதிர்பார்த்த நிலையில், அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, ஆந்திரா நோக்கிச் சென்றது. அதன்பின் உருவான, மற்றொரு காற்றழுத்த தாழ்வு மியான்மர் நோக்கிச் சென்றது. புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானால் தான், பருவமழை தீவிரமாகும்.
இந்நிலையில் இன்று (நவ., 15) இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் மிக மெதுவாக நகரக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
இன்று (நவ.,15) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* மயிலாடுதுறை
* திருவாரூர்
* நாகப்பட்டினம்
நாளை (நவ.,16) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* கடலூர்
* மயிலாடுதுறை
* திருவாரூர்
* நாகப்பட்டினம்
நாளை (நவ.,16) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* ராமநாதபுரம்
* சிவகங்கை
* புதுக்கோட்டை
* தஞ்சாவூர்
* விழுப்புரம்
நாளை மறுநாள் (நவ.,17) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* காஞ்சிபுரம்
* செங்கல்பட்டு
* விழுப்புரம்
* தூத்துக்குடி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி
நாளை மறுநாள் (நவ.,17) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* திருவள்ளூர்
* சென்னை
* கடலூர்
* மயிலாடுதுறை
* திருவாரூர்
* நாகப்பட்டினம்
* தஞ்சாவூர்
* புதுக்கோட்டை
* ராமநாதபுரம்
நவ.,18ம் தேதி கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* திருவள்ளூர்
* சென்னை
* காஞ்சிபுரம்
* ராணிப்பேட்டை
* திருப்பத்தூர்
* செங்கல்பட்டு
* விழுப்புரம்
* கடலூர்
நவ.,19ம் தேதி கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி
* கோவை

