டிச., 15ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
டிச., 15ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
UPDATED : டிச 12, 2024 05:21 PM
ADDED : டிச 12, 2024 04:48 PM

சென்னை: அந்தமான் கடல் பகுதியில் டிசம்பர் 15 புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:கடந்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும் பல மாவட்டங்களில் அனேக இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, நாகை மாவட்டம் கோடியக்கரையில் 18 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. நான்கு இடங்களில் மிக கனமழையும் 72 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.
அடுத்து இரண்டு நாட்களுக்கு தமிழகம் புதுவை காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தென் தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரி கடல், லட்சத்தீவு பகுதிகளுக்கு இன்றும் நாளையும் மீனவர்கள் செல்ல வேண்டாம்
வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரைஅக்டோபர் 1 முதல் இன்று வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பதிவாக வேண்டிய இயல்பான மழை அளவு 40 செ.மீ.,
பதிவான அளவு 47 செ.மீ.,
இது 16 சதவீதம் அதிகமாகும்
இன்று காலை முதல் மதியம் 2 மணி வரை பதிவான மழை அளவு:
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு -11 செ.மீ.,
நெற்குன்றம் 10 செ.மீ.,
மீனம்பாக்கம் 8 செ.மீ.,
அண்ணாபல்கலை , தரமணி தலா 7செ.மீ.,
பூந்தமல்லி, நந்தனம் தலா 6 செ.மீ.,
கொளப்பாக்கம், பூந்தமல்லி ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி தலா 5 செ.மீ.,
அந்தமான் கடல் பகுதியில் டிசம்பர் 15 புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
உலகம் முழுதும்
அட்லாண்டிக் பகுதியிலும் புயலின் போது கணி்ப்புகள் தவறின. தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இதே நிலைதான். அட்லாண்டிக் பகுதியில் புயலின் போது 112 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றனர். ஆனால் புயல் கரையை கடந்த போது 260 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசியது. புயலுக்குள் விமானத்தை செலுத்தி அட்லாண்டிக் பகுதியில் விவரங்களை சேகரிக்கின்றனர்.இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.