ADDED : நவ 18, 2025 06:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதால், அரசு மீது குறை சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் இருக்கிறார்.
தமிழகம் விவசாயம் சார்ந்த மாநிலம். நவ., - டிசம்பரில் மழை பெய்து, விவசாய பணி முழு வேகத்தில் நடக்கிறது. ஜனவரியில் பொங்கல் திருவிழா நடக்கவிருக்கிறது. அடுத்த ஓரிரு மாதத்தில் சட்டசபைக்கான தேர்தல் நடக்கவுள்ளது. இச்சூழலில் வாக்காளர் திருத்தப் பணிக்கு அவசியம் ஏன்?
தி.மு.க., 1949ல் துவங்கி, 1957ல் தான் தேர்தலை எதிர்கொண்டது. அதுவரை மக்களின் மனதை அறிந்து, மக்களுக்காக போராடி, மக்கள் விரும்பிய பின்னர் தான் தேர்தலை சந்தித்தது. ஆனால், கட்சி துவங்கி, உடனே தேர்தலை சந்தித்து, ஆட்சிக்கு வர நினைக்கின்றனர். அதெல்லாம் இங்கு நடக்காது.
-- எ.வ.வேலு
தமிழக அமைச்சர், தி.மு.க.,

