sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

“ 1993 முதல் இருந்த மத்தியமைச்சர்கள் என்னோடு ஜெயிலில் அடைக்க வேண்டும் ” - ராஜா விவாதம்

/

“ 1993 முதல் இருந்த மத்தியமைச்சர்கள் என்னோடு ஜெயிலில் அடைக்க வேண்டும் ” - ராஜா விவாதம்

“ 1993 முதல் இருந்த மத்தியமைச்சர்கள் என்னோடு ஜெயிலில் அடைக்க வேண்டும் ” - ராஜா விவாதம்

“ 1993 முதல் இருந்த மத்தியமைச்சர்கள் என்னோடு ஜெயிலில் அடைக்க வேண்டும் ” - ராஜா விவாதம்


UPDATED : ஜூலை 25, 2011 03:44 PM

ADDED : ஜூலை 25, 2011 11:53 AM

Google News

UPDATED : ஜூலை 25, 2011 03:44 PM ADDED : ஜூலை 25, 2011 11:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான விசாரணையில் மாஜி அமைச்சர் ராஜா வாதாடினார்.

இன்றைய வாதத்தின்போது நான் எடுத்த முடிவு எதிலும் தவறு இல்லை. இது நானாக எடுத்த கொள்கை அல்ல என்றும் வாதிட்டார். ஸ்பெக்டரம் ஊழல் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஓ.பி.,சைனி தலைமையில் செயல்படும் சிறப்பு கோர்ட் முன்பு ஆஜராகி இன்று வாதாடினார். அவரது வாதத்தின்போது மிக உற்சாகமாக காணப்பட்டார். அவரும் அவரது வக்கீல் சுஷீல்குமார் எடுத்து வைத்த வாதங்கள் விவரம் வருமாறு:



ஸ்பெக்ட்ரம் ஏலம் விடாமல் எடுக்கும் முடிவு என்பது ( முதலில் வருவோருக்கு முன்னுரிமை ) கடந்த கால தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போதே இருந்து வந்தது. இதனைத்தான் நானும் பின்பற்றினேன். இதில் நானாக எந்த முடிவும் எடுக்கவில்லை, கொள்கையையும் மாற்றவில்லை . ஆனால் இந்தக்கொள்கை பின்பற்றியது தவறு என்றால் 1993 முதல் தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த அனைவரும் என்னோடு ஜெயிலில் அடைக்கப்பட வேண்டும்.



பிரதமர் - நிதி அமைச்சருக்கும் தெரியும் : டி.பி., ரியாலிட்டி, யூனிடெக் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு சட்ட ரீதியாக நடந்திருக்கிறது. இது பிரதமருக்கு தெரியும் படியே நடந்தது. இதனை அவர் மறுக்கட்டும், தவறு இருந்திருக்கும பட்சத்தில் பிரதமர் அதனை தடுத்திருக்கலாம், காபினட் கொடுத்த அறிவுரையின் பேரில் ஒதுக்கப்பட இந்த விவகாரத்திற்கு நிதி அமைச்சர் சிதம்பரமும் ஒப்புதல் கொடுத்துள்ளார். பா.ஜ.,வை சேர்ந்த அருண்ஷோரி 26 லைசென்ஸ்களும், தயாநிதி 25 லைசென்ஸ்சுகளும் ஒதுக்கியிருக்கி்ன்றனர். நான் 122 லைசென்ஸ் கொடுத்திருக்கிறேன். இவைகளில் எண்ணிக்கைதான் வித்தியாசம். ஆனால் கொள்கை ஒன்றுதான். இப்படி இருக்கும்பட்சத்தில் என்னிடம் மட்டும் கேள்வி எழுப்பப்படுவது ஏன் ? இதில் எங்கே குற்றம் நடந்திருக்கிறது ? இதில் எங்கே சதி நடந்திருக்கிறது ? நான் குற்றமற்றவன்.





எனது காலத்தில் ஏழைகள் பயன் அடைந்தனர்: எனது அமைச்சர் காலத்தில் மக்களுக்கு சேவை புரிந்துள்ளேன் . நான் அமைச்சராக இருந்தபோது மொபைல் அழைப்பு கட்டணம் மிக குறைந்த அளவிற்கு குறைக்கப்பட்டது. எல்லோரும் மொபைல் போன் பெற வேண்டும் என விரும்பினேன். அதற்கான வாய்ப்பையும் உருவாக்கி கொடுத்தது எனது கொள்கை. இதன் காரணமாக நாட்டில் உள்ள ரிக்ஷா தொழிலாளி முதல் அனைத்து ஏழை மக்களும் பயன்அடைந்தனர்.இவ்வாறு அவர் வாதிட்டார். இவ்வாறு வாததுரை நடந்ததாக அவரது வக்கீல் தெரிவித்தார்.



இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., கடந்த 21 ம் தேதி முதல் 23 ம் தேதி வரை வாதிட்டனர். ராஜாவின் வாதம் இன்று முதல் துவங்கியிருக்கிறது. ராஜா கடந்த பிப்.2 ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.












      Dinamalar
      Follow us