உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 18, 2026 09:05 AM

அ நிறம் | அளவு
வெள்ளை அறிக்கை என்ற பெயரில், நிதியமைச்சர் வெளியிட்டிருப்பது, புதிய உண்மைகளையோ, புதிய தீர்வுகளையோ கொண்ட ஆவணம் அல்ல. மக்கள் ஏற்கனவே நன்கு அறிந்த உண்மைகள்.
நிதிநிலை நெருக்கடியை, எப்படி சரி செய்யப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமே பரிசு. துறைகளில் உள்ள 'லீக்கேஜ்'களை தடுக்க வேண்டும் என்பதையே, தீர்வாக வைத்திருப்பது, வரிகளை உயர்த்தும் பாதையை, தமிழக வெற்றிக் கழக அரசு தேர்வு செய்துள்ளதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளை அறிக்கை என்பது, பிரச்னைகளை பட்டியலிடுவதோடு நிற்காமல், அவற்றுக்கான தீர்வுகளையும் முன்வைக்க வேண்டும். ஆனால், த.வெ.க., அரசு வெளியிட்ட அறிக்கையில், தெளிவான தொலைநோக்கு பார்வை, செயல்திட்டங்கள் இல்லை. எனவே, வெள்ளை அறிக்கை அல்ல; ஏற்கனவே எல்லோராலும், அடித்து, துவைத்து, வெளுத்து போன அறிக்கை.
- தினகரன், பொதுச்செயலர், அ.ம.மு.க.,
