sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தினமும் ஒரு சாஸ்தா: தமிழக ஐயப்பன் கோவில்கள் -19

/

தினமும் ஒரு சாஸ்தா: தமிழக ஐயப்பன் கோவில்கள் -19

தினமும் ஒரு சாஸ்தா: தமிழக ஐயப்பன் கோவில்கள் -19

தினமும் ஒரு சாஸ்தா: தமிழக ஐயப்பன் கோவில்கள் -19


ADDED : டிச 03, 2024 06:36 PM

Google News

ADDED : டிச 03, 2024 06:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐயப்பன் தன் மனைவியரான பூர்ணா, புஷ்கலாவுடன் உள்ள கோயில் பற்றிய தகவல்கள் இங்கு இடம் பெற்றுள்ளது.

வெற்றிக்கு...


புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் குண்டு தாங்கிய அய்யனாரப்பன் கோயில் உள்ளது. இங்கு பொற்கலை, பூரணியுடன் அருள்புரிகிறார்.

இப்பகுதியை பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சி செய்த காலம். ஒருநாள் இவர்களுக்கு எதிராக ஆங்கிலேயப்படை கோரிமேடு வரை வந்துவிட்டது. அப்போது பிரெஞ்சுப்படை அங்கு வராததால், வீரன் ஒருவன் தனியாக ஆங்கிலேயப்படையை தடுத்தார். பீரங்கி குண்டுகளால் தாக்கினாலும் அதை சமாளித்து போரிட்டு அவர்களை ஓட விட்டார் வீரன். போர் நடந்த இடத்தில் விசாரணை செய்த போது அந்த வீரன் பற்றிய தகவல் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அந்த இடத்தில் அய்யனார் சிலையும், குண்டுகளும் சிதறிக் கிடந்தன.

அய்யனார்தான் காத்தார் என தெரிந்ததும் பிரெஞ்சுக்காரர்கள் கோயில் கட்டி கொடுத்தனர். சுவாமிக்கு 'குண்டு தாங்கிய அய்யனார்' என்ற பெயரும் ஏற்பட்டது. இவரை நினைத்து தொடங்கும் செயல்கள் வெற்றி பெறும். ஆவணியில் திருவிழா நடக்கிறது. கோயிலை சுற்றி அங்காள பரமேஸ்வரி, சப்த கன்னிமார்கள், சிவன், சிவகாம சுந்தரி, காவல் தெய்வமாக வீரபத்திரன் உள்ளனர்.

புதுச்சேரி பஸ் ஸ்டாண்டில் இருந்து 4 கி.மீ.,

நேரம்: காலை 6:00 - 10:00 மணி மாலை 5:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 93454 15802, 96778 75456

அருகிலுள்ள தலம்: மதுராந்தகம் திருவெண்காட்டீஸ்வரர் 84 கி.மீ.,

நேரம்: காலை 7:30 - 11:00 மணி மாலை 5:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 98429 09880, 93814 82008






      Dinamalar
      Follow us