ADDED : ஜன 20, 2024 06:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : சென்னையில் நேற்று இரவு கவர்னர் மாளிகையில் தங்கினார், பிரதமர் மோடி. அப்போது அவரை வரவேற்ற கவர்னர் ரவி, இயற்கை விவசாயிகள் உற்பத்தி செய்த, புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாழை நார் மற்றும் துாய பட்டு கலந்து பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பொன்னாடையை பிரதமருக்கு அணிவித்தார்.
கையால் நெய்யப்பட்ட இப்பொன்னாடையில், புதிய பார்லிமென்டில் நிறுவப்பட்டுள்ள செங்கோல், அயோத்தி ராமர் கோவில் வடிவம், பிரதமர் படம் ஆகியவை இடம் பெற்றிருந்தன.