ADDED : செப் 22, 2024 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே ஆவரங்காடு பகுதியை சேர்ந்த அழகுசுந்தரம் மகன் பழனி முருகன் 28.
இவர் நேற்று மாலை ஆவரங்காடு அருகே பிச்சைபிள்ளையேந்தல் பகுதியில் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுடன் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
அவர்கள் பழனிமுருகன் தலையில் கல்லை துாக்கி போட்டு கொலை செய்து விட்டு தப்பினர். அவர்களை திருப்பாச்சேத்தி போலீசார் தேடுகின்றனர். இதே பகுதியில் செப்.18ல் மருமகன் தனது மாமியாரையும் அவரது தாயாரையும் வெட்டி கொலை செய்தார். அதே நாளில் பாப்பாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் தொழிலாளி காளையார் 56, மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மாவட்டத்தில் அடுத்தடுத்து 4 கொலைகள் நடந்துள்ளன.