ADDED : செப் 25, 2024 01:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:
மத்திய வங்கக்கடலில் ஆந்திர கரைக்கு அப்பால், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தொடர்ச்சியாக, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில், வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது.
இதன் நகர்வால், தமிழகத்தின் வடமாவட்டங்களில், அடுத்த ஒரு வாரத்துக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளது. வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இன்று மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் பலத்த தரைக்காற்றுடன் மிதமான மழை பெய்யலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த, இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில் மாலை, இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.