அண்ணா பல்கலை சம்பவத்திற்கு காரணம் துணைவேந்தர் இல்லாததே: ப.சிதம்பரம்
அண்ணா பல்கலை சம்பவத்திற்கு காரணம் துணைவேந்தர் இல்லாததே: ப.சிதம்பரம்
ADDED : டிச 30, 2024 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: “சென்னை அண்ணா பல்கலை சம்பவத்திற்கு துணைவேந்தர் இல்லாதது தான் காரணம்,” என, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி., தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அரசியல் சாசனத்திற்கு முரணானது.
சென்னை அண்ணா பல்கலை சம்பவத்தை கண்டிக்கிறேன். அண்ணா பல்கலை உட்பட ஆறு பல்கலைகளுக்கு துணைவேந்தர்கள் இல்லை; இது வருத்தமளிக்கிறது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டது இங்கிலாந்து கற்றுக் கொடுத்த பாடமா என தெரியவில்லை.
தமிழகத்தில் மட்டு மின்றி எல்லா மாநிலத்திலும் அதிகமான குற்றங்கள் நடக்கின்றன. இதை தடுப்பது அரசின் பொறுப்பு. அரசின் பொறுப்புகளை தட்டிக் கழிப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.