நடிகர் சந்திரசேகருக்கு 'அகாடமி புரஸ்கார்' விருது
நடிகர் சந்திரசேகருக்கு 'அகாடமி புரஸ்கார்' விருது
ADDED : ஜூன் 17, 2026 06:02 AM

சென்னை: நாட்டின் கலாசார துறையின் கீழ் இயங்கும், சங்கீத நாடக அகாடமியின் பொதுக்குழுக் கூட்டம், சமீபத்தில் டில்லியில் நடந்தது.
அதன் செயலர் ராஜு தாஸ், 2024 - 25ம் ஆண்டுக்கான அகாடமி ரத்னா, சங்கீத நாடக அகாடமி புரஸ்கார், உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் விருதுகளுக்கு தேர்வான, கலைஞர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டார்.
அதன்படி, சங்கீத நாடக அகாடமி புரஸ்கார் விருதுக்கு, தமிழகத்தை சேர்ந்த, மூத்த நடிகர் வாகை சந்திரசேகர் தேர்வாகி உள்ளார். இது குறித்து, சந்திரசேகர் கூறுகையில்,''திரைப்படங்களில் பல வேடங்களில் நடித்திருந்தாலும், அதற்கு முன்னோடியாக இருந்த நாடகப் பங்களிப்புக்காக, இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
''நான், கடந்த 1975 முதல் 1980 வரை, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சமூக, புராண, சரித்திர நாடகங்களில் நடித்து இருக்கிறேன்,'' என்றார்.
