சட்டவிரோத பட்டாசு தயாரிப்பின் போது விபத்து: ஒருவர் பலி
சட்டவிரோத பட்டாசு தயாரிப்பின் போது விபத்து: ஒருவர் பலி
ADDED : ஜன 28, 2024 11:36 PM

விருதுநகர் : விருதுநகர் ஆமத்துார் அருகே வெள்ளூரில் தோட்டம் ஒன்றில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் 51, பலியானார்.
வெள்ளூரைசேர்ந்தவர் மகேஸ்வரன் 47. இவருக்கு சொந்தமான அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் தகர செட் அமைத்து சட்ட விரோதமாகபட்டாசு தயாரித்து வந்தனர். இதற்கு தேவையான மூலப்பொருட்களை அங்கு பதுக்கி வைத்தும், பேன்சி ரக பட்டாசுகளை தயார் செய்து சேமித்தும் வைத்திருந்தனர்.
அங்கு அப்பகுதியைச் சேர்ந்த கண்ணன் ஜன., 27 இரவு 10:30 மணிக்கு பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மூலப்பொருட்களில் உராய்வு ஏற்பட்டு வெடித்ததில் அவர் பலியானார். ஆமத்துார் போலீசார் தோட்ட உரிமையாளர் மகேஸ்வரன் மீது வழக்கு பதிந்தனர்.
பட்டாசு கோடவுனுக்கு சீல்
சிவகாசி அருகே விளாம்பட்டி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன் 52. இவருக்கு சொந்தமான பட்டாசு கோடவுன் சித்துராஜபுரம் ரோட்டில் உள்ளது. இங்கு அனுமதி இன்றி பட்டாசு தயாரித்ததுடன் அரசால் தடை செய்யப்பட்ட சரவெடிகள்மற்றும் அலுமினியம் பவுடர், வெடி உப்பு, கருந்திரிகளை பதுக்கி வைத்திருந்தார்.
மாரனேரி போலீசார், ஆனையூர் வி.ஏ.ஓ., காமராஜ் ஆகியோர் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்து கோடவுனிற்கும் சீல் வைத்தனர்.