போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்: முதல்வர் ஸ்டாலின்
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்: முதல்வர் ஸ்டாலின்
UPDATED : மே 16, 2024 04:18 PM
ADDED : மே 16, 2024 11:48 AM

சென்னை: போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
போதைப்பொருட்களுக்கு எதிராக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தில், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, டிஜிபி சங்கர் ஜிவால், கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போதைப்பொருள் ஒழிப்பு
போதைப்பொருள் நடமாட்டம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தில், அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். போதைப்பொருள் விற்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விட இன்னும் அதிகமாக கண்காணித்து போதைப்பொருள் கடத்தி வருபவர்களை கைது செய்ய வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.