ADDED : பிப் 12, 2025 12:31 AM
சென்னை:போலி ஸ்டீல் ஸ்க்ரப்பர்களை ஒழிக்க, சென்னை போலீசாருடன், ஜோதி லேப்ஸ் நிறுவனம் இணைந்து, பல இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.
இது குறித்து, ஜோதி லேப்ஸ் நிறுவனத்தின், 'லீகல் அண்டு கம்பெனி செக்ரட்டரி' ஷ்ரேயஸ் திரிவேதி கூறியதாவது:
எங்கள் எக்ேஸா ஸ்க்ரப்பர்களின் தரத்தில் தயாரிக்கப்பட்ட, ஸ்டீல் நன்றாக இருக்கும். இதற்கிடையே, வாடிக்கையாளர்கள் சிலர் எங்கள் தயாரிப்பில், ஸ்க்ரப்பர் துருப்பிடித்து விட்டதாகவும், கையில் காயம் ஏற்படுவதாகவும் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து விசாரித்தபோது, எழுத்து மாற்றத்துடன், எக்ஸ்கியூ, எக்ஸ்என் எக்ஸ்யு, எக்ஸோ என்ற பெயர்களில், போலியான தயாரிப்புகள் விற்கப்படுவது தெரியவந்தது.
இதுகுறித்து, சென்னை போலீசில் புகார் அளித்தோம். போலீசார் நடத்திய சோதனையில், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, போலி தயாரிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை சென்னையில் தயாரிக்கப்பட்டு கோவை, திருச்சி, மதுரை, வேலுார் போன்ற நகரங்களில் விநியோகம் செய்யப்பட்டதும், போலீசாருடன் நடத்திய சோதனையில் தெரியவந்தது.
போலி ஸ்டீல் ஸ்க்ரப்பரை ஒழிக்க, போலீஸ் எடுத்து வரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது. பொதுமக்கள் எப்போதுமே வாங்குவதற்கு முன், 'எக்ஸோ' என்ற பிராண்ட் பெயரை சரிபார்த்து கொள்ளவும். வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்கும், உயர்ந்த தரத்தை பராமரிப்பதற்கும், எங்கள் நிறுவனம் உறுதி பூண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.