sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மீண்டும் 30 ஆண்டுக்கு முந்தைய அதிரடி அரசியல்: எதிர்க்கட்சிகளுக்கு தி.மு.க., மேயர் மிரட்டல்

/

மீண்டும் 30 ஆண்டுக்கு முந்தைய அதிரடி அரசியல்: எதிர்க்கட்சிகளுக்கு தி.மு.க., மேயர் மிரட்டல்

மீண்டும் 30 ஆண்டுக்கு முந்தைய அதிரடி அரசியல்: எதிர்க்கட்சிகளுக்கு தி.மு.க., மேயர் மிரட்டல்

மீண்டும் 30 ஆண்டுக்கு முந்தைய அதிரடி அரசியல்: எதிர்க்கட்சிகளுக்கு தி.மு.க., மேயர் மிரட்டல்


ADDED : பிப் 24, 2026 08:33 PM

Google News

ADDED : பிப் 24, 2026 08:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி : கடந்த 30 ஆண்டுகளுக்கு முந்தைய அதிரடி அரசியல், மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தி.மு.க., மேயர் மிரட்டல் விடுத்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

துாத்துக்குடியில், தி.மு.க., வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதா ஜீவன் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது.

இதில், கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினரும், துாத்துக்குடி மேயருமான ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பேசியதாவது:துாத்துக்குடி தொகுதியில், பா.ஜ., நடத்தும் தெருமுனை பிரசார கூட்டங்களில் பேசும் அனைவரும் முதல்வர், துணை முதல்வர், கனிமொழி எம்.பி., மற்றும் தி.மு.க., ஆட்சி குறித்து அவதுாறுகளை தெரிவிக்கின்றனர். தேர்தல் நேரத்தில் இப்படி பேசுவோருக்கு பதிலடி கொடுத்தால்தான் நம் இலக்கை அடைய முடியும்.

குடிநீர் திட்டத்தில் முறைகேடு செய்த முன்னாள் மேயர் சசிகலா புஷ்பா, மாநகராட்சி நிர்வாகம் குறித்து தேவையில்லாத கருத்துகளை கூறுகிறார். இதுபோல், வேலைக்கு பணம் பெற்ற மற்றொரு முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ், அவசியமின்றி பேசுகிறார்.

தி.மு.க., ஆட்சி குறித்து தவறான கருத்துகளை பேசுபவர்கள், இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், 30 ஆண்டுகளுக்கு முந்தைய அதிரடி அரசியல் மீண்டும் ஆரம்பிக்கப்படும். யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் கிடையாது. அமைதியாக செல்கிறோம் என நினைக்க வேண்டாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையே, “பா.ஜ., எழுப்பிய கேள்விகளுக்கு நேரடியாக பதில் கூற முடியாததால், பொதுமேடையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மேயர் ஜெகன் கூறி, அரசியல் மிரட்டல் விடுத்துள்ளார்,” என பா.ஜ., மாவட்டச் செயலர் சித்ராங்கதன் குற்றம் சாட்டியுள்ளார்.






      Dinamalar
      Follow us