மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ADDED : பிப் 09, 2024 04:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ‛‛ இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க தூதரக ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: இலங்கை கைது செய்துள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் கைது மற்றும் படகுகள் பறிமுதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களின் வாழ்வாதார உரிமைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
மீன்வர்கள், மீன்பிடிப் படகுகளை விடுவிக்க தூதரகரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

