தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/ 'மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் நடவடிக்கை'

 'மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் நடவடிக்கை'

 'மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் நடவடிக்கை'


ADDED : ஜூன் 25, 2026 03:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 03:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரம்பலுார்: ''பள்ளி மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

தமிழக முதல்வருடை ய பிறந்தநாள் அன்று, பள்ளிக்குள் சென்று பாடவேளையில், மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சிலர் தொந்தரவு ஏற்படுத்தியதாக தகவல் கிடைத்தது. பாடவேளையில், பள்ளி மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல்வரின் அறிவுறுத்தலின்படி, ஒரு ஒன்றிய செயலரை கட்சியை விட்டு நீக்கியிருக்கிறோம்.

கல்வித்துறையில் பணியிட மாறுதல், பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடத்துவதற்கான ஆயத்த பணிகள் நடக்கிறது. வெகுவிரைவில் தகுதி மற்றும் திறமை அடிப்படையில் நிரப்பப்படும். இருமொழி கொள்கை என்பது எங்களுடைய டி.என்.ஏ., கட்டாயமாக நாங்கள் அதை விட்டு தரமாட்டோம்.

பிளஸ் 2 வரை காலை உணவு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கோர்சஸ் சார்ந்த விழிப்புணர்வு வகுப்புகளையும் மற்றும் தமிழ் வகுப்பு, தன்னம்பிக்கை வகுப்பு, தலைமைத்துவ வகுப்பு, இது மூன்றையும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆறாம் வகுப்பிலேயே இலவச சைக்கிள் கொடுக்க பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us