ADDED : நவ 11, 2025 04:55 AM

சென்னை: துள்ளுவதோ இளமை பட நடிகர் அபிநய், 44, உடல்நல பாதிப்பால் நேற்று காலமானார்.
கடந்த, 2002ல் வெளியான, துள்ளுவதோ இளமை படத்தில் நடிகராக அறிமுகமானவர் அபிநய். தொடர்ந்து, சிங்கார சென்னை, ஜங்ஷன் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தார்.
அப்படங்கள் தோல்வியடைந்ததால், நீண்ட இடைவேளைக்கு பின், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் குணச்சித்திர தோற்றத்தில் நடித்தார்.
பெரிய அளவில் சினிமாவில் வாய்ப்புகள் வராததால், திரைத்துறையில் இருந்து ஒதுங்கி இருந்தார். கோடம்பாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த இவருக்கு, கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு, ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு உடல் மெலிந்து படுத்த படுக்கையானார். இவருக்கு தனுஷ், பாலா போன்ற சில நடிகர்கள் மருத்துவ சிகிச்சைக்காக உதவினர்.
இந்நிலையில், நேற்று காலை 4:00 மணியளவில், அபிநய் அவர் வசித்த வாடகை வீட்டிலேயே காலமானார். அபிநய் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
நேற்று மாலை, ஏ.வி.எம்., மின் மயானத்தில் அபிநய் இறுதிச் சடங்கு நடந்தது.

