sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நடிகர் ஷிஹான் ஹூசைனி மரணம்

/

நடிகர் ஷிஹான் ஹூசைனி மரணம்

நடிகர் ஷிஹான் ஹூசைனி மரணம்

நடிகர் ஷிஹான் ஹூசைனி மரணம்

17


ADDED : மார் 25, 2025 07:12 AM

Google News

ADDED : மார் 25, 2025 07:12 AM

17


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; நடிகரும், பிரபல கராத்தே வீரருமான ஷிஹான் ஹூசைனி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 60.

பிரபல கராத்தே மாஸ்டரான ஷிஹான் ஹூசைனி கே. பாலசந்தரின் புன்னகை மன்னன் படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான அவர், நடிகர் விஜயின் பத்ரி படம் மூலம் பலரின் கவனம் ஈர்த்தார். 400க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சியளித்துள்ளார்.

அண்மைக்காலமாக அரிய வகை ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த ஷிஹான் ஹூசைனி அதற்கான சிகிச்சை எடுத்து வந்தார். அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியில் இருந்து சிகிச்சைக்காக ரூ.5. லட்சம் வழங்கப்பட்டது.

இந் நிலையில், சிகிச்சை பலனின்றி அதிகாலை (மார்ச் 25) 1.45 மணியளவில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 22 நாட்களாக அவர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். அவரது மரணத்தை அறிந்த திரையுலகத்தினர் அதிர்ச்சியும், சோகமும் அடைந்துள்ளனர்.

முன்னதாக, ஷிஹான் ஹூசைனி தமது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்திருந்தார்.






      Dinamalar
      Follow us