UPDATED : டிச 09, 2024 05:15 PM
ADDED : டிச 09, 2024 07:50 AM

சென்னை: திருவண்ணாமலையில், கடந்த டிசம்பர் 1ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 7 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து, இன்று(டிச.,09) நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'ஓ மை காட்' என நடிகர் ரஜினி காந்த் வருத்தம் தெரிவித்தார்.
பெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக, பெய்த பலத்த மழையால், திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் கிழக்கு பக்கத்தில், வ.உ.சி., நகர், 11வது தெருவின் அருகே திடீரென டிசம்பர் 1ம் தேதி மாலை, 5:00 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. மண்ணில் புதையுண்டு 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், இன்று (டிச.,09) சென்னை விமான நிலையத்தில் விமானம் ஏற வந்த ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். பெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக, திருவண்ணாமலையில் 7 பேர் இறந்துள்ளனர் என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு, எப்போ...? என ரஜினி கேட்டார்.
இதற்கு, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனரே? என நிருபர் கூறியதும், 'ஓ மை காட்... சாரி...!' என ரஜினி வருத்தம் தெரிவித்தார்.