இலவச டீ டோக்கன் வழங்கி த.வெ.க., மாநாட்டிற்கு அழைப்பு
இலவச டீ டோக்கன் வழங்கி த.வெ.க., மாநாட்டிற்கு அழைப்பு
ADDED : அக் 25, 2024 06:25 AM

சின்னாளபட்டி : சின்னாளபட்டியில் விஜய் கட்சி நிர்வாகிகள் மக்களுக்கு இலவச டீ டோக்கன் வழங்கி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக். 27ல் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடக்க உள்ளது.
மாநாட்டுக்கு பொதுமக்களின் ஆதரவை சேர்க்கும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் அவ்வழியே சென்ற பாதசாரிகள், வாகனங்களில் செல்வோர், கடைவீதி வணிக நிறுவனங்களின் ஊழியர்கள் என அனைவருக்கும் கட்சி நிர்வாகிகள் டோக்கன் வழங்கினர். இங்குள்ள குறிப்பிட்ட டீக்கடையில் டோக்கனுக்கு டீ வழங்கப்படுகிறது .
சின்னாளபட்டி நகர செயலாளர் வைரமுத்து கூறுகையில்,''முதற்கட்டமாக கடைவீதியில் இலவச டீ டோக்கன் வழங்கி மாநாட்டிற்கு அழைக்கும் பணி துவங்கி உள்ளது. மகளிர் அணி நிர்வாகிகளை முன்னிறுத்தி வீடு தோறும் அழைப்பிதழ் வழங்கி மாநாட்டிற்கு அழைக்கும் பணி அடுத்து மேற்கொள்ளப்பட உள்ளது'' என்றார்.

