விஜயகாந்த் வீட்டில் நடிகர் விஜய்: பிரேமலதாவை சந்தித்தார்
விஜயகாந்த் வீட்டில் நடிகர் விஜய்: பிரேமலதாவை சந்தித்தார்
ADDED : ஆக 19, 2024 07:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மறைந்த தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்றார் நடிகர் விஜய்.
நடிகர் விஜய் ‛‛தமிழக வெற்றிக்கழகம்'' என்ற கட்சியை துவக்கியுள்ளார். இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு சென்று தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதாவை சந்தித்து பேசினார். அவருடன் இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரி்ப்பாளர் அர்ச்சனா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
நடிகர் விஜய் நடித்து வெளியாக உள்ள கோட் படத்தில் நடிகர் விஜய்காந்த், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
இதையடுத்து இன்று நடிகர் விஜய், விஜயகாந்த் வீட்டிற்கு சென்று பிரேமலதாவை சந்தித்து நன்றி தெரிவித்தார்.