நடிகர் விஷாலுக்கு டும்டும்; ஆக.29ல் நடிகை சாய் தன்ஷிகாவை கரம் பிடிக்கிறார்
நடிகர் விஷாலுக்கு டும்டும்; ஆக.29ல் நடிகை சாய் தன்ஷிகாவை கரம் பிடிக்கிறார்
UPDATED : மே 20, 2025 05:31 AM
ADDED : மே 19, 2025 09:07 PM

சென்னை: பிரபல நடிகர் விஷால், நடிகை சாய் தன்ஷிகாவை கரம் பிடிக்கிறார். இருவருக்கும் ஆக.29ல் திருமணம் நடக்கிறது.
செல்லமே படம் மூலம் நடிகராக அறிமுகம் ஆனவர் விஷால். சண்டக்கோழி, தாமிரபரணி, அவன் இவன், பட்டத்து யானை, மதகஜராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
47 வயதாகிவிட்ட அவர் நடிகர் சங்கத்தின் செயலாளராக உள்ளார். நடிகர் சங்க கட்டடம் கட்டப்பட்ட பின்னரே திருமணம் செய்து கொள்வேன் என்று அறிவித்து இருந்தார். நடிகர் சங்க கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில், ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், விரைவில் அதுபற்றி தெரிவிக்க உள்ளதாகவும் கூறி இருந்தார்.
அந்த பெண் யாராக இருக்கும் என்று பல்வேறு கேள்விகள், எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில், அவரின் திருமணம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. நடிகர் விஷால், நடிகை சாய் தன்ஷிகாவை கரம் பிடிக்கிறார். இருவருக்கும் ஆக.29ல் திருமணம் நடக்க இருக்கிறது. ்(அன்று நடிகர் விஷாலுக்கு பிறந்த நாளும் கூட)
சென்னையில் இன்று நடைபெற்ற யோகிடா திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகை தன்ஷிகா, நடிகர் விஷால் இருவரும் இந்த திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
சாய் தன்ஷிகாவின் பெற்றோர் சம்மதத்துடன் இந்த அறிவிப்பை வெளியிடுவதாக மேடையில் நடிகர் விஷால் தெரிவித்தார். திருமணம் முடிந்த பிறகு நடிகை சாய் தன்ஷிகா நடிப்பார், திறமைக்கு தடை போடக்கூடாது என்றும் நடிகர் விஷால் கூறினார்.