ADDED : நவ 09, 2024 12:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: நடிகர் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ.,கட்சி சார்பில் திண்டுக்கல் ரவுண்ட்ரோடு தனியார் தியேட்டர் முன் முற்றுகை போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர்
அபுதாகிர் தலைமை வகித்தார்.
துணைத்தலைவர் அப்துல் லத்தீப்,பொது செயலாளர் சையது,மாவட்ட பொருளாளர் தவுபிக்,தொகுதி தலைவர் சேக்அப்துல்லா,செயலாளர் நசீர்,மாவட்ட செயலாளர் அங்குசாமி முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடிகர்கள் கமல், சிவகார்த்திகேயன் உருவ படத்தை எரித்தனர்.
அங்கிருந்த போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 55 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றமான நிலை ஏற்பட்டது.