தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்


UPDATED : ஜூலை 08, 2025 04:20 PM

ADDED : ஜூலை 08, 2025 04:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 08, 2025 04:20 PM ADDED : ஜூலை 08, 2025 04:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில், கடந்த 23ல் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு, கடந்த 26ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் இதே வழக்கில் கைது செய்யப்பட்டார். இருவரும் ஜாமின் கோரி, சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து அவர்கள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், இருவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வழக்கின் புலன் விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராக வேண்டும். ரூ.10 ஆயிரத்துக்கான சொந்த ஜாமினும், ரூ.10 ஆயிரத்துக்கான இரு நபர் ஜாமினிலும் இருவரையும் ஜாமினில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us