ADDED : ஏப் 30, 2025 02:08 PM

சென்னை: சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரபல நடிகர் அஜித்குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சினிமா ஷூட்டிங். கார் பந்தயம், துப்பாக்கி சுடுதல் என எப்போதும் தன்னை பிசியாகவே வைத்திருப்பவர் நடிகர் அஜித்குமார். அண்மையில் இவரது நடிப்பில் 2 படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட வைத்தன.
அவருக்கு நேற்று முன்தினம் ஜனாதிபதி பத்ம பூஷன் விருதை வழங்கி கவுரவித்தார். அந்த நிகழ்ச்சி முடிந்து நேற்று அவர் சென்னை திரும்பி இருந்தார். அப்போது திரண்டிருந்த ரசிகர்கள் மத்தியில் அஜித் காலில் லேசான காயம் ஏற்பட்டது.
இந் நிலையில் அஜித் சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு அண்மையில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சை நடந்தது. அது தொடர்பான அடுத்தக்கட்ட பரிசோதனைக்காகவும், நேற்று ஏற்பட்ட காயம் காரணமாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அஜித்குமார் மருத்துவமனையில் இருக்கும் தகவலை அறிந்த ரசிகர்கள் கவலையில் உள்ளனர். ஆனால், மருத்துவமனையில் அஜித் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து எந்த வித அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் அவரது தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை.